TNPSC Thervupettagam

மேக உருவாக்க ஆய்வுக் கட்டமைப்பு

November 5 , 2024 24 days 118 0
  • கடந்த மாதம் அரசாங்கத்தினால் தொடங்கப்பட்ட மௌசம் திட்டம் ஆனது, நாட்டில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தச் செய்வதை மட்டுமல்லாமல், சில வானிலை நிகழ்வுகளை மேலாண்மை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் (IITM) இந்தியா இத்தகைய வகையிலான முதல் மேக உருவாக்க ஆய்வுக் கட்டமைப்பினை (அறை) நிறுவுகிறது.
  • ஒரு மேக அறையானது மூடிய உருளை அல்லது குழாய் வடிவ குவளை போன்றது என்பதோடு இதனுள்ளே நீராவி, தூசிப் படலங்கள் போன்றவை உட்செலுத்தப் படச் செய்கின்றன.
  • இந்த அறைக்குள் தேவையான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையின் கீழ், ஒரு மேகம் உருவாக இயலும்.
  • மேகத் துளிகள் அல்லது பனித் துகள்களை உருவாக்கும் சில தூண்டுதல் துகள்களை அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய இந்த வசதி வழி வகுக்கும்.
  • இந்தியப் பருவக்காற்று மேகங்களைப் பற்றி நன்கு ஆய்வு செய்வதற்குத் தேவையான, வெப்பச்சலன பண்புகளைக் கொண்ட மேக அறையை இந்தியா உருவாக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்