TNPSC Thervupettagam

மேசைப் பந்தாட்டம் - தரவரிசை

January 21 , 2018 2371 days 787 0
  • ஆண்களுக்கான 18 வயதுக்குட்பட்டோர் வகைப்பிரிவினரின் சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தின் (International Table Tennis Federation) சர்வதேச தரவரிசைப்படி, சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள முதல் இந்திய மேசைப் பந்தாட்ட வீரராக மனவ் தாக்கர் உயர்ந்துள்ளார்.
  • இதே வகைப்பிரிவில் சீன தைபெய் முதல் இடத்தையும், சீனாவின் வாங் சுகுயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
  • கடந்த ஆண்டு  ஸ்லோவேனியா மற்றும் இந்திய ஓபனில் இரு புரோ-டூர் தங்கப் பதக்கங்களையும், தாய்லாந்து ஓபனில் இரண்டாம் இடத்தையும் மனவ் தாக்கர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் 21 வயதிற்குட்பட்டோர் வகைப்பிரிவினருக்கான தரவரிசையில் முதல் 15 இடங்களுள் ஒன்றையும் இவர் பெற்றுள்ளார்.
  • சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தின் மகளிருக்கான 15 வயதுக்குட்பட்டோருக்கான வகைப்பிரிவில் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை இந்தியாவின் தியா சிடாலே பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்