TNPSC Thervupettagam

மேட்டூர் அணை நீர் திறப்பு

June 15 , 2024 33 days 145 0
  • காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக திறக்கப்படும் சேலத்தில் உள்ள மேட்டூர் அணை வழக்கமான தேதியான ஜூன் 12 ஆம் தேதியன்று திறக்கப்படவில்லை.
  • கடந்த ஐந்தாண்டுகளில் வழக்கமான தேதி தவறியது இதுவே முதல் முறையாகும்.
  • அணையின் நீர் மட்டமானது, அதன் முழுக் கொள்ளளவான 93.47 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மாறாக 13.97 ஆயிரம் மில்லியன் கன அடி மட்டுமே உள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அணை திறக்கப்படவில்லை.
  • நீர்மட்டம் ஆனது அதன் முழு கொள்ளளவான 120 அடிக்கு மாறாக 43.52 அடியாக உள்ளது.
  • அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 404 கனஅடியாகவும் (cusecs), நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் இருந்தது.
  • பொதுவாக, குறுவை சாகுபடி பருவத்தில் 3.24 லட்சம் ஏக்கர் பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்படும்.
  • ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் பாசனப் பரப்பானது 2.9 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு மாறாக 5.6 லட்சம் ஏக்கர் பரப்பளவாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்