TNPSC Thervupettagam

மேனிஸ் மிஸ்டீரியா

December 11 , 2023 222 days 247 0
  • அறிவியலாளர்கள் சமீபத்தில் ஒன்பதாவது வகையான எறும்புத் திண்ணிகளை (பாங்கோலின்) கண்டுபிடித்து, அதற்குத் தற்காலிகமாக "மேனிஸ் மிஸ்டீரியா" என்று பெயரிட்டுள்ளனர்.
  • எறும்புத் திண்ணிகள் மேனிடே குடும்பத்தினைச் சேர்ந்த பாலூட்டிகள் மற்றும் ஃபோலிடோட்டா எனப்படும் ஒற்றை வகை உயிரலகினைச் சேர்ந்தவை ஆகும்.
  • எட்டு வகையான எறும்புத் திண்ணிகள் தற்போது வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • நான்கு ஆசிய எறும்புத் திண்ணிகள் மேனிஸ் இனத்தைச் சேர்ந்தவை மற்றும் நான்கு ஆப்பிரிக்க எறும்புத் திண்ணிகள் ஃபேடஜினஸ் மற்றும் ஸ்முட்சியா வகையைச் சேர்ந்தவை ஆகும்.
  • இந்தப் புதிய இனமானது அதன் பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா இனங்களிடமிருந்து சுமார் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்