TNPSC Thervupettagam
May 23 , 2019 1894 days 669 0
  • “விண்வெளிப் பொருட்கள்” என்ற புத்தகத்திற்காக மேன்புக்கர் சர்வதேச விருதை ஓமனைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோகா அல்ஹார்தி என்பவர் வென்றுள்ளார்.
  • இந்த நாவலானது “நிலவின் பெண்மணிகள்” என்ற புத்தகமாக 2010 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
  • இந்த விருதைப் பெறும் முதல் அராபிய மொழி எழுத்தாளர் இவராவார்.
  • மேன்புக்கர் சர்வதேசப் பரிசு என்பது தி மேன் குழுமத்தினால் வழங்கப்படும் ஒரு சர்வதேச இலக்கிய விருதாகும்.
  • இந்த விருதானது 50,000 பவுண்டுகள் அல்லது 64,000 அமெரிக்க டாலர்கள் என்ற நிதித் தொகையைக் கொண்டிருக்கும். இது வெற்றி பெற்ற படைப்பிற்கு வழங்கப்படும். இந்த விருதானது எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆகியோர்களுக்கிடையே சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும்.
  • ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரான மாரிலின் பூத் என்பவருடன் ஜோக் அல்ஹார்தி இந்த விருதைப் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றார்.
  • புனைவுக் கதைக்கான மேன்புக்கர் பரிசானது இதே குழுமத்தினால் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்