- மேம்படுத்தப்பட்ட மத்திய ஓய்வூதிய கணக்கீட்டு அலுவலக (Central Pension Accounting Office-CPAO) இணையதளத்தை பொது கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் (Controller General of Accounts - CGA) வெளியிட்டுள்ளது.
- CPAO-வின் தேசிய தகவல் மையத்தால் (NIC- National Informatics Centre) இந்த இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள் மற்றும் குறைதீர்ப்பு வசதிகள் போன்றவற்றை மத்திய அமைச்சகங்கள், வங்கிகள் மற்றும் மத்திய அரசுத்துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கு ஒற்றை இணைவாயிலில் அளிக்கும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட இணையவாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய ஓய்வூதிய கணக்கீட்டு அலுவலகம்
- பொது கணக்கு கட்டுப்பாளர் ஆணையமானது (Controller General of Accounts-CGA) மத்திய அரசின் உச்ச கணக்கீட்டு ஆணையமாகும்.
- இது இந்திய அரசின் முதன்மை கணக்கியல் ஆலோசகராகும். கணக்கீட்டு அமைப்பு முறையின் தொழிற் நுட்ப மேலாண்மையை நிறுவுதலும், பராமரித்தலும் இதன் பொறுப்பாகும்.
- CGA அலுவலகமானது மத்திய அரசிற்கு அதன் செலவுகள், வருவாய்கள், கடன்கள் மற்றும் பல்வேறு நிதி அளவுருக்கள் போன்றவற்றின் மாதாந்திர மற்றும் வருடாந்திர ஆய்வறிக்கையை தயார் செய்து அளிக்கின்றது.
- இந்திய தலைமை கணக்கை அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், அரசியலமைப்புச் சட்டம் விதி 150-ன் கீழான குடியரசுத் தலைவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்கீடுகளின் வடிவங்களை இது பரிந்துரை செய்கின்றது.
- இது மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
- இது அரசியல் நிறுவன (Constitution body) அமைப்புமல்ல, சட்ட அமைப்பும் (Statutory body) அல்ல.