TNPSC Thervupettagam

மேம்படுத்தப் பட்டப் பிணைப்பு ரக பீரங்கித் துப்பாக்கி அமைப்பு

August 13 , 2022 709 days 380 0
  • மேம்படுத்தப் பட்டப் பிணைப்பு ரக பீரங்கித் துப்பாக்கி அமைப்பானது (ATAGS), சுதந்திரத் தினத்தின் போது மேற்கொள்ளப் படும் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழக்க வணக்கத்திற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • இது வரையில், இந்திய நாட்டின் வருடாந்திரக் கொண்டாட்டங்களில் பிரிட்டிஷ் துப்பாக்கிகள் (ஆர்ட்னன்ஸ் QF 25-பவுண்டர்) மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
  • மேம்படுத்தப் பட்டப் பிணைப்பு ரக பீரங்கித் துப்பாக்கி அமைப்பு என்பது 155 மிமீ, 52 உள் விட்டம் கொண்ட கனரக பீரங்கித் துப்பாக்கி ஆகும்.
  • இது ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • புதிய கனரக பீரங்கித் துப்பாக்கியின் தாக்குதல் வீச்சுத் தொலைவான  45 கி.மீ. என்பது உலகிலேயே இத்தகைய வரம்புடைய முதல் துப்பாக்கி இது என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்