TNPSC Thervupettagam

மேம்படுத்தப் பட்ட மற்றும் அதிக தாக்கம் கொண்ட ஆராய்ச்சிக்கான தேசியத் திட்டம்

June 13 , 2023 406 days 194 0
  • மின்னாற்றல் துறை அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து "ஒரு மேம்படுத்தப் பட்ட மற்றும் அதிகத் தாக்கம் கொண்ட ஆராய்ச்சிக்கான தேசியத் திட்டம் (MAHIR)" என்ற தலைப்பிலான ஒரு தேசியத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • மின்னாற்றல் துறையில் சமீபத்திய மற்றும் புதிதாக உருவாகி வரும் தொழில் நுட்பங்களின் மீதான உள்நாட்டு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் செயல்விளக்கம் ஆகியவற்றினை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு அவற்றைச் செயலாக்க நிலைக்கு மேம்படுத்தும்.
  • 2023-24 முதல் 2027-28 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு அமல்படுத்தப் படுவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், கருத்தாக்கம் முதல் தயாரிப்பு வரையிலான தொழில்நுட்பச் செயல்முறைச் சுழற்சி அணுகுமுறையானது பின்பற்றப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்