மேம்படுத்தப் பட்ட வேதி செல் ஆற்றல் சேமிப்புக்கான தேசியத் திட்டம்
September 21 , 2022 671 days 336 0
மேம்படுத்தப் பட்ட வேதி செல் மின்கல அடுக்குகள் துறையில் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலப் போக்குகள் குறித்த ஒரு அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு சமர்ப்பித்தது.
உள்நாட்டுப் பொருளாதார மதிப்பை உருவாக்குவதில் மேம்படுத்தப் பட்ட வேதி செல் ஆற்றல் சேமிப்பு மீதான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் சாத்தியமானப் பங்கினை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் சலுகைகள் முன்னணி மின்கல அடுக்கு உற்பத்தியாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வழி வகுக்கும்.
கனரகத் தொழில் துறை மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சகம் ஆனது மேம்படுத்தப் பட்ட வேதியியல் செல் (ACC) ஆற்றல் சேமிப்பு மீதான தேசியத் திட்டத்திற்கான முதன்மை அமைச்சகமாகும்.
மேம்பட்ட வேதி செல்களின் உற்பத்தியானது மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை எளிதாக்கும்.