TNPSC Thervupettagam

மேம்பாட்டிற்காக நாம்

March 11 , 2018 2324 days 662 0
  • புதுதில்லியில் இரு நாள் தேசிய சட்ட அவையாளர்கள் மாநாட்டை பிரதமர்  நரேந்திர மோடி  தொடங்கி வைத்துள்ளார்.
  • மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடத்தப்பெறும் இந்த இருநாள் மாநாட்டின் கருத்துரு “மேம்பாட்டிற்காக நாம்” (We for development).
  • வளர்ச்சிக்கான தங்களது திட்டங்கள் மற்றும் யோசனைகளை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடையே  பரிமாறிக் கொள்ள அவர்களை  ஒற்றை மேடையில்  ஒன்று சேர்ப்பதற்காக  இம்மாநாடு நடத்தப்படுகிறது..
  • 115 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் என அரசால் அடையாளம் காணப்பட்டு அவை “உயர் லட்சிய மாவட்டங்கள்” (Aspirational districts) என குறிப்பிடப்பட்டுள்ளன.
  • மேலும் இந்த உயர் லட்சிய  மாவட்டங்களில் மாவட்ட அதிகாரிகளாக   இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியமர்த்த பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
  • வளர்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு (Role of public representatives in development) மற்றும் உகந்த வகையில் மூல ஆதாரங்களின் பயன்பாடு (optimum use of resources were the subjects on agenda for discussions) ஆகியவை இம்மாநாட்டின் கலந்துரையாடலுக்கான  நிரல்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்