தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12,800 நகர்ப்புற ஆட்சிப் பிரிவுகளின் மாமன்ற உறுப்பினர்கள் (வார்டு கவுன்சிலர்கள்) பதவிப் பிரமாணம் செய்து கொண்டு உள்ளனர்.
மாநகராட்சிக் கழகத்தின் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலானது மார்ச் 4 ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
ஒரு ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 நகரப் பஞ்சாயத்துகளுக்கு (பேரூராட்சிகள்) பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
20 மேயர் பதவிகளில் 11 இடங்களைப் பெண்களுக்கும், 9 இடங்களை ஆண்களுக்கும் தி.மு.க. அரசானது ஒதுக்கியுள்ளது.