ஆராய்ச்சியாளர்கள் அகஸ்தியர் உயிர்க்கோள இருப்பு, அமைதிப்பள்ளத்தாக்கு-முக்குருத்தி தேசியப் பூங்கா மற்றும் கூர்க்-வயநாடு வனப்பகுதிகளின் அருகே உள்ள பாதுகாக்கப்படாத பகுதிகள் பிரம்புப் பனை (Rattan) இனங்களின் பெரும் எண்ணிக்கை உடைய பகுதிகளாக (Hotspot) இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ராட்டன் (Rattan) என்பது கலாமொய்டியே துணைக்குடும்பத்தைச் சேர்ந்த உலகின் பழமையான சுமார் 600 நெடுபடர் பனை இனங்களின் பொதுப் பெயராகும்.
கச்சாப் பிரம்பு பனையானது மரப்பயன்பாட்டு உபகரணங்களாக செய்யப்பட்டு பல்வேறு மரச்சாமான்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
அதிகப்படியான அறுவடை, இருப்பிட அழிவு போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை இவை சந்தித்து வரும் வேளையில் தற்போது இவற்றிற்கான பாதுகாப்பு குறித்த கவனம் மிக முக்கிய தேவையுடைய ஒன்றாகும்.
கள ஆய்வுகள் மற்றும் ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட இடவமைப்புத் தகவல்கள் மூலம் புனேவின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களும், பெங்களூருவின் சூழலியல் மற்றும் சுற்றுப்புறத்திற்கான அசோகா அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர்களும் மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் குறிப்பிட்ட பிரதேசத்திற்குட்பட்ட (endemic) 21 பிரம்பு இனங்களின் பரவலை வரைபடமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இந்தப் பனைப் பிரம்புகள் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.