பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் “புரோகத்துல்லா ஆண்டிகுலா” என்ற ஒரு புதிய பச்சைப் பாம்பு இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் மட்டுமே காணப்படும் ஒரு பழமையான இனமாகும்.
இது 26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒலிகோசின் காலத்தின் போது உருவாகியதாகக் கருதப் படுகின்றது.
மெல்லிய உடல் மற்றும் தாவரம் போன்ற தோற்றத்தின் காரணமாக இப்பாம்புகள் இப்பெயரைப் பெறுகின்றன.