புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜரில் உள்ள இராணுவ ஆட்சிகள் ECOWAS எனப் படும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் கூட்டணியில் இருந்து உடனடியாக வெளியேறுவதாக அறிவித்துள்ளன.
ECOWAS என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகத்தைக் குறிக்கிறது.
நைஜர் மற்றும் மாலி கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதால், இந்த மூன்று நாடுகளும் ECOWAS பிரிவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டன.
சஹேலில் இருந்து பிரான்சு நாட்டு இராணுவம் வெளியேறுவது கினி வளைகுடா நாடுகளான கானா, டோகோ, பெனின் மற்றும் ஐவரி கோஸ்ட் வரையிலான தெற்கு நாடுகள் வரை மோதல்கள் பரவுவது குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் இராணுவத் தலைவர்கள் சமீபத்தில் சஹேல் நாடுகளின் கூட்டணியின் கீழ் ஒன்றுபட்டனர்.