TNPSC Thervupettagam

மேற்கு சேத்தி நதி நீர்மின் நிலையத் திட்டம்

August 12 , 2022 711 days 417 0
  • மேற்கு நேபாளப் பகுதிகளில் உள்ள 1,200 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்துவதற்கு இந்தியாவின் நீர் மின் வாரியத்திற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்தது.
  • இந்த நீர்மின் நிலையங்களில் 750 மெகாவாட் திறன் கொண்ட மேற்கு சேத்தி நதி நீர் மின் நிலையம் மற்றும் 450 மெகாவாட் திறன் கொண்ட சேத்தி நதி (SR-6) கூட்டு நீர்த் தேக்க மின் நிலையம் ஆகியவை அடங்கும்.
  • மேற்கு சேத்தி நதி நீர் மின் நிலையமானது மேற்கு நேபாளத்தில் உள்ள சேத்தி ஆற்றின் மீது கட்டப் படுவதற்காக முன்மொழியப் பட்ட ஒரு நீர்மின் நிலையமாகும்.
  • இந்தத் திட்டத்திலிருந்து சீனா விலகியதையடுத்து, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்தத் திட்டத்தைக் கையகப்படுத்த உள்ளது.
  • மேற்கு சேத்தி நதி நீர் மின் நிலையத் திட்டமானது 60 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கருத்தாக்கம் செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்