TNPSC Thervupettagam

மேற்கு தொடர்ச்சி மலை - புதிய புல்இனம்

April 23 , 2018 2279 days 2572 0
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயிர்ப்பல்வகைத் தன்மையினுடைய    உயிரின  வள  மிகுமிடத்தில் (Hot spot)  அமைந்துள்ள  அகஸ்தியர்  மலை உயிர்க்கோள இருப்பின்  (Agasthyamala Biosphere Reserve)  உள் அமைந்துள்ள பொன்முடி மலையில் பிம்பிரிஸ்டைலிஸ் அகஸ்தியமலேயன்சிஸ் (Fimbristylis agasthyamalaensis)  எனப் பெயரிடப்பட்ட  புதிய புல் போலான தாவர இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • கோரைப் புல் (sedge) என வகைப்படுத்துள்ள இந்த புல் போலான புதிய தாவர இனத்திற்கு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உள்ளூர் இடத்தின் பெயர் கொண்டு பிம்பிரிஸ்டைலிஸ் அகஸ்தியமலேயன்ஸிஸ் (Fimbristylis agasthyamalaensis)    என பெயரிடப்பட்டுள்ளது.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தாவர இனமானது சைபெரேசியே குடும்பத்தைச் (Cyperaceae family) சேர்ந்தது.
  • இந்த புல் போலான தாவரத்தில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில்  பூத்தல் (flowering)  மற்றும்  கனிதல் (fruiting)  காணப்படுகின்றன.
  • சர்வதேச பன்னாட்டு பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN-international Union for conservation of nature)  வகைப்பாட்டின் படி, “மிகவும் அச்சுறுத்தல் “ (critically endangered)   நிலையிலுள்ள தாவரமாக இத்தாவரத்தைப்  வகைப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் இத்தாவரத்தின் முதன்மை பாதுகாப்பு நிலை மதிப்பீட்டிற்கு (preliminary conservation assessment) பரிந்துரை வழங்கியுள்ளனர்.

அகஸ்தியர் மலை உயிர்க்கோள இருப்பு

  • 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அகஸ்தியர் மலை உயிர்க்கோள இருப்பு (Agasthyamala Biosphere Reserve) தோற்றுவிக்கப்பட்டது.
  • 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகஸ்தியர் மலை உயிர்க்கோள இருப்பானது யுனெஸ்கோ அமைப்பினுடைய உயிர்க்கோள இருப்புகளின் உலக வலையத்தில் (World Network of Biosphere Reserves of UNESCO) சேர்க்கப்பட்டது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இறுதியான தெற்கு முனையில் அகஸ்தியர் மலை உயிர்க்கோள இருப்பு அமைந்துள்ளது.
  • அகஸ்தியர் மலை உயிர்க்கோள இருப்பானது தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பரந்து விரிந்துள்ளது.
  • நீலகிரி வரையாடு (Nilgiri Tahr), ஆசிய யானைகள் (Asian Elephant),  புலிகள் உட்பட பல்வேறு அரிய ஓரிடவாழ் (endemic) விலங்குகளின் உறைவிடமாக அகஸ்தியர் மலை உயிர்க்கோள இருப்பு உள்ளது.
  • தற்போது உலகில் உயிர்வாழ்கின்ற மிகவும் பழமையான பண்டைய பழங்குடியினர்களுள் (oldest surviving ancient tribes) ஒருவரான  கணிகாரன் பழங்குடியினருக்கு (Kanikaran tribe) அகஸ்தியர் மலை உயிர்க்கோள இரு ப்பானது உறைவிடமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்