சமீபத்தில் கேரளா முழுவதும் பரவியுள்ள மேற்கு நைல் வைரஸ் (WNV) என்பது பிலாவி விரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொசுக்களால் இரத்தத்தின் மூலம் பரவும் ஒரு வைரஸ் (ஆர்போவைரஸ்) ஆகும்.
மேற்கு நைல் வைரஸ் என்பது கொசுக்களால் முக்கியமாகப் பரவும் ஒற்றை இழை RNA வைக் கொண்ட வைரஸ் ஆகும்.
இது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களை ஒத்தது ஆகும்.
இந்த வைரஸானது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, பாதிக்கப்பட்ட குலெக்ஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது.
அவை பாதிக்கப்பட்டப் பறவைகளிடமிருந்து (பெரும்பாலும் புலம்பெயர்ந்தவை) இந்த வைரஸைப் பெறுகின்றன.
இது மனிதர்கள், குதிரைகள் மற்றும் பிற பாலூட்டிகளையும் பாதிக்கிறது.