TNPSC Thervupettagam

மேற்கு நைல் வைரஸ் – கேரளா

May 17 , 2024 222 days 220 0
  • சமீபத்தில் கேரளா முழுவதும் பரவியுள்ள மேற்கு நைல் வைரஸ் (WNV)  என்பது பிலாவி விரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொசுக்களால் இரத்தத்தின் மூலம் பரவும் ஒரு வைரஸ் (ஆர்போவைரஸ்) ஆகும்.
  • மேற்கு நைல் வைரஸ் என்பது கொசுக்களால் முக்கியமாகப் பரவும் ஒற்றை இழை RNA வைக் கொண்ட வைரஸ் ஆகும்.
  • இது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களை ஒத்தது ஆகும்.
  • இந்த வைரஸானது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, பாதிக்கப்பட்ட குலெக்ஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது.
  • அவை பாதிக்கப்பட்டப் பறவைகளிடமிருந்து (பெரும்பாலும் புலம்பெயர்ந்தவை) இந்த வைரஸைப் பெறுகின்றன.
  • இது மனிதர்கள், குதிரைகள் மற்றும் பிற பாலூட்டிகளையும் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்