TNPSC Thervupettagam

மேற்கு மண்டல குழுவின் 23-வது சந்திப்பு

May 4 , 2018 2271 days 1252 0
  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் மேற்கு மண்டல குழுவின் (Western Zonal Council) 23-வது சந்திப்பு நடைபெற்றுள்ளது.
  • மண்டல குழுக்களானது 1956-ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுச் சீரமைப்புச் சட்டத்தின் படி (States Reorganization Act, 1956) உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பாகும் (statutory body). இது ஓர் அரசியலமைப்பு அமைப்பல்ல.
  • மாநிலங்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும் மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டன.
  • தற்சமயம், நடப்பில் மொத்தம் 5 மண்டல மண்டல குழுக்கள் உள்ளன.
  • அவையாவன
    • வடக்கு மண்டல குழு
    • மேற்கு மண்டல குழு
    • மத்திய மண்டல குழு
    • தெற்கு மண்டல குழு
    • கிழக்கு மண்டல குழு
  • மண்டல குழுக்கள் அரசியற்சட்ட அமைப்புகள் (constitutional bodies) அல்ல. இவை மத்திய உள்துறை அமைச்சரை (Union Home minister) தலைவராகக் கொண்ட விளக்கப் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நல்கு (only deliberative and advisory bodies) அமைப்பு மட்டுமே ஆகும்.
  • வடகிழக்கு மாநிலங்கள் இந்த ஐந்து மண்டல குழுக்களில் உள்ளடக்கப்படவில்லை.
  • 1972 – ஆம் ஆண்டின் வடகிழக்கு கவுன்சில் சட்டத்தின் (North Eastern Council Act, 1972) கீழ் உருவாக்கப்பட்ட வடகிழக்கு கவுன்சிலினால் (North Eastern Council) வடகிழக்கு மாநிலங்களின் குறிப்பிட்ட பிரச்சனைகள் களையப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்