மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் போலியோ ஒழிப்பு முயற்சிகள்
June 3 , 2023 543 days 250 0
கேமரூன், சாட் மற்றும் நைஜர் ஆகிய மூன்று நாடுகள் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய போலியோ தடுப்பு மருந்துப் பிரச்சாரத்தினை 2020 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றன.
மூன்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகள் ஐந்து வயதிற்குட்பட்ட 21 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்தினை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளன.
19 இரண்டாம் வகை போலியோ வைரஸ் பாதிப்புகள் கண்டறியப் பட்டதற்கு வேண்டிய நடவடிக்கைகளை நன்கு மேற்கொள்ளும் வகையில் தடுப்பு மருந்து இயக்கம் தற்போது தொடங்கப் பட்டது.
நைஜர் நாட்டில் இரண்டு பாதிப்புகள், சாட் நாட்டில் 10 பாதிப்புகள், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் நான்குப் பாதிப்புகள் மற்றும் கேமரூன் நாட்டில் மூன்றுப் பாதிப்புகள் சமீபத்தில் பதிவாகியுள்ளன.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பதிவாகியுள்ள அனைத்துப் போலியோ நோய்களும் தடுப்பூசி மூலம் தூண்டப்பட்ட போலியோ வைரஸ் பரவலால் ஏற்படுகிறது.