TNPSC Thervupettagam

மேற்கு வங்காளத்தின் அரிசி வகைக்கு புவிசார் குறியீடு

August 30 , 2017 2514 days 862 0
  • மேற்கு வங்க மாநிலத்தின் புர்த்வான் மாவட்டத்தில் விளையும் கோபிந்தோபோக் (Gobindobhog) எனும் அரிசி வகைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • புர்த்வான் பிராந்தியமானது (கிழக்கு மற்றும் மேற்கு புர்த்வான் என்று இரண்டு பகுதிகள்) ‘வங்காளத்தின் அரிசிக் கிண்ணம் ‘ என்று அழைக்கப்படுகிறது.
  • கோபிந்தோபோக் அரிசி வகை தாமோதர் ஆற்றின் தெற்குப் பகுதிகளில் பெருமளவில் பயிரிடப்படுகிறது.
  • ஆண்டின் பிற்பகுதியில் பயிரிடப்படுவதால் மழையால் பாதிக்கப்படாமல் வளர்கிறது
  • குருணை அளவில் , வெள்ளை நிறமாக , நறுமணம் வீசும் இந்த அரிசி வகையானது இனிப்பான வெண்ணெய் சுவையுடன் , ஒட்டும் தன்மையினைக் கொண்டிருக்கும்.
  • பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படாத இவ்வகை அரிசி , ஏக்கருக்கு அதிக உற்பத்தித் திறன் கொடுப்பதால் விவசாயிகள் நன்கு லாபம் அடைகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்