TNPSC Thervupettagam

மேற்கு வங்காளத்தின் புதிய பல்லுயிர் மையங்கள்

April 28 , 2023 449 days 273 0
  • மேற்கு வங்காளத்தில் நான்கு புதிய பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், தற்போது மேற்கு வங்காளமானது நாட்டிலேயே அதிக அளவில் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்கள் உள்ள ஒரு மாநிலமாக உள்ளது.
  • அந்த நான்கு புதிய தளங்கள்
    • சார் பாலிடங்கா- நாடியா,
    • மாநில தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலைய வளாகம் - நாடியா,
    • டார்ஜிலிங்கில் உள்ள நாம்திங் போகர் மற்றும்
    • பிர்பூமில் உள்ள ஆம்கோய் புதைபடிவப் பூங்கா.
  • நாம்திங் போகரி என்பது இமயமலை சாலமண்டர் இனங்களின் தாயகமாகும்.
  • ஆம்கோய் புதைபடிவப் பூங்காவானது மேற்கு வங்காளத்தில் உள்ள முதல் மரங்களின் புதைபடிவப் பூங்கா ஆகும்.
  • மேற்கு வங்காளத்தில் தற்போதுள்ள அந்த நான்கு பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்கள் : ஜார்கிராமில் உள்ள சில்கிகர் கனக் துர்கா, கூச் பெஹாரில் உள்ள பானேஸ்வர் ஷிவ் டிகி, டார்ஜீலிங்கில் உள்ள டோங்லு மற்றும் தோத்ரே ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்