TNPSC Thervupettagam

மேற்கு வங்காளத் தலைமைச் செயலாளர் பிரச்சினை

June 1 , 2021 1182 days 651 0
  • மேற்கு வங்காளப் பணிப் பிரிவின் 1987 ஆம் ஆண்டினைச் சேர்ந்த இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான பந்தியோபத்யாய் என்பவர் தமக்கு 60 வயது நிரம்புவதைத் தொடர்ந்து மே 31 ஆம் தேதியன்று பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தார்.
  • எனினும் மத்திய அரசின் ஒப்புதலோடு அவரது பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.
  • கோவிட்-19 பெருந்தொற்றினை அவர் கையாண்ட அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவரது பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதி வழங்கக் கோரி பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி இருந்தார்.

பிரச்சினை

  • பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர் அலபன் பந்தியோபத்யாய் அவர்களை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து விடுவிக்குமாறு மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மேலும் புதுடெல்லியில் வடக்குப் பிரிவில் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் துறைக்கு உடனே வரவேண்டும் என்று பந்தியோபத்யாய் அவர்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்