TNPSC Thervupettagam

மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் OBC இட ஒதுக்கீடு

May 24 , 2024 214 days 188 0
  • தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) ஆனது பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் பொது வேலைவாய்ப்பில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBCs) இட ஒதுக்கீட்டை அதிகரிக்கப் பரிந்துரை செய்துள்ளது.
  • தற்போது, ​​பஞ்சாப் அரசானது பொது வேலை வாய்ப்புகளில் 25% பட்டியலிடப்பட்ட சாதியினருக்கும் 12% இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமென மொத்தம் 37% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது.
  • பொது வேலைவாய்ப்பில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை கூடுதலாக 13% அதிகரித்து, அவர்களுக்கான மொத்த இடஒதுக்கீட்டினை 25% ஆக மாற்ற தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முன்மொழிந்துள்ளது.
  • இன்றுவரையில், 143 சமூகங்கள் மாநில OBCகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன,  அவற்றில் 83 சாதிகள்/சமூகங்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவை.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள மாநில OBC சமூகங்களின் பட்டியலில் மொத்தம் 179 OBC சமூகங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்