TNPSC Thervupettagam

மேற்கூரை சூரிய மின் உற்பத்தி – உத்திரப் பிரதேசம்

December 31 , 2017 2550 days 1115 0
  • அரசுக்குச் சொந்தமான கெயில் இந்தியா (GAIL India) நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மேற்கூரை சூரியமின் உற்பத்தி நிலையத்தை (Solar Roof-top Station) ஆரம்பித்துள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் பாடாவில் தனது பெட்ரோ கெமிக்கல் நிலைய வளாகத்தில் 65,000 சதுர மீட்டர்களை உள்ளடக்கிய வகையில் 5.76 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி இயந்திரத்தை இந்நிறுவனம் நிறுவியுள்ளது.
  • கெயில்-ன் சூரியசக்தி கைப்பற்றும் திட்டம் ஆண்டொன்றிற்கு 6300 டன்கள் அளவிற்கு கார்பன் வெளியீட்டினைக் குறைக்கவும், இந்தியாவிற்கு அதன் பருவநிலை தொடர்பான இலட்சியங்களை அடையவும் உதவும்.
  • கெயில்-ன் இந்த மேற்கூரை சூரிய மின் உற்பத்தித் திட்டம் உற்பத்தி, மற்றும் தயாரித்து வழங்கல் ஆகியவற்றில் இணைந்து உள்ள இந்திய உற்பத்தியாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) என்ற திட்டத்தின் கீழ் வரும் ஒரு பகுதியாகும்.
  • நாட்டின் மிகப் பெரிய மேற்கூரை சூரியமின் உற்பத்தி நிலையம் 12 மெகாவாட் திறன் கொண்ட டாடா சோலார் பவர் நிலையத்தால் அமிர்தசரஸில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையம் ஆண்டொன்றிற்கு 150 லட்ச அலகுகள் என்ற அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, ஆண்டொன்றிற்கு 19,000 டன்கள் அளவிற்கு கார்பன் வெளியீட்டினை (Carbon Emission) தணிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்