இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஆனது “ராமன்” என்ற மேல் நிலை ராக்கெட் என்ஜினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
இது நோபல் பரிசை வென்றவரான சர் சி.வி. ராமன் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட, இந்தியாவின் முதலாவது 100% முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட முன்னோக்கிச் செல்லும் நிலையிலான இருநிலை கொண்ட திரவ ராக்கெட் என்ஜின் செலுத்தியாகும் (3D printed bi-propellant liquid rocket engine injector).
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் என்ஜினை சோதனை செய்யும் இந்தியாவின் முதலாவது தனியார் விண்வெளி நிறுவனம் இதுவாகும்.
ராமன் என்பது குறைந்த எண்ணிக்கையிலான இயங்கும் பாகங்களைக் கொண்ட ஒரு இலகுரக முப்பரிமாண அச்சிடப்பட்ட ராக்கெட் என்ஜினாகும்.
இது 250 முதல் 700 கிலோ கிராம் எடையுள்ள செயற்கைக் கோளைக் குறைந்த (தாழ்) சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் திறன் கொண்டது.