TNPSC Thervupettagam

மே தினம் – மே 01

May 1 , 2019 1978 days 574 0
  • மே 01 ஆம் தேதியானது சர்வதேசத் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.இது மே தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இத்தினமானது தொழிலாளர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர்களை கொண்டாடுகிறது.
  • இந்தியாவில் முதலாவது தொழிலாளர் தினமானது எம். சிங்காரவேலர் என்பவரால் சென்னையில் 1923 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்தியாவின் முதலாவது வர்த்தகக் கூட்டிணைவைச் சிங்காரவேலர் தொடங்கினார்.
  • இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார்.
வரலாறு
  • தொழிலாளர் தினமானது அமெரிக்காவின் தொழிலாளர் கூட்டிணைவு இயக்கத்தின் போது தோற்றுவிக்கப்பட்டது.
  • 1886 ஆம் ஆண்டு மே 01 அன்று சிகாகோ நகரில் நடைபெற்ற ஹேமார்க்கெட் விவகாரத்தை நினைவு கூறுவதற்காக மே 01 ஆம் தேதி சர்வதேசத் தொழிலாளர்கள் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நாளில் ஒரு நாளில் 15 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரத்தை பணி நேரமாக வேண்டி பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.
  • சிகாகோ காவல் துறையானது அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்