TNPSC Thervupettagam
March 30 , 2018 2431 days 1480 0
  • வேஷாக் புத்தத் திருவிழாவோடு (Buddhist festival of Vesak) மே தின நிகழ்ச்சிகள் இடைப்படுவதைத்  தவிர்ப்பதற்காக, மே 1 ஆம் தேதியின்  சர்வதேச தொழிலாளர் தின நிகழ்ச்சிகளை (International Workers’ Day events) காலந்தள்ளி (Postpone) மே 7 அன்று கொண்டாட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
  • இலங்கையில் உள்ள புத்த பிக்குகளின் (Buddhist clergy) செல்வாக்குடைய அமைப்பான மஹா சங்கா (Maha Sangha)  அமைப்பினுடைய  கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • புத்த பூர்ணிமா (Buddha Purnima’) அல்லது புத்த ஜெயந்தி (Buddha Jayanti) எனப்படும் வேஷாக் திருவிழா தினமானது புத்தரின் பிறப்பு, அறிவொளி பெறல் (enlightenment) மற்றும் இறப்பை நினைவு கூர்வதற்காக   கொண்டாடப்படுகின்றது.
  • சிங்களர்களின் நாட்காட்டியின்படி (Sinhalese calendar), பெரும்பாலும் மே மாதத்தில் வேஷாக் வாரம் அமையும். ஆனால் இவ்வாண்டு இவ்வாரமானது ஏப்ரல்- 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் தொடங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்