TNPSC Thervupettagam

மே மாதத்தில் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது

June 19 , 2021 1129 days 511 0
  • 1977 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் மே மாதத்தின் போது மிகக் குறைவான அளவிலான சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.
  • ஒட்டு மொத்த இந்தியாவிலும் பதிவான சராசரி வெப்ப நிலையானது 34.18oC என இந்திய வானியல் ஆய்வுத் துறையின் தரவுகள் கூறுகின்றன.
  • இது கடந்த 44 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக்குறைவான வெப்பநிலையாகும், மேலும் இது 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான நான்காவது குறைவான வெப்பநிலை ஆகும்.
  • மே மாதத்தில் பதிவான மிகக் குறைவான சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது 32.68 oC (1917 ஆம் ஆண்டு) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்