மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு செயற்கருவி- கோபைலட்
April 9 , 2023 598 days 262 0
மைக்ரோசாப்ட் நிறுவனமானது, மைக்ரோசாஃப்ட் பாதுகாப்பு கோபைலட் எனப் படுகின்ற அதன் சமீபத்திய இணையவெளிப் பாதுகாப்பு சார்ந்த ஒரு புத்தாக்க அம்சத்தினை வெளியிட்டது.
இந்தச் செயற்கருவியானது, அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பின் மூலம், பல்வேறு அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து அதற்கு எதிராக செயலாற்றப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு உதவுகிறது.
இது ஒட்டுமொத்த அச்சுறுத்தல் அமைப்பினைப் பற்றிய ஒரு சிறந்தப் புரிதலையும் வழங்குகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சார்ந்த நுண்ணறிவு மற்றும் Chat GPT-4 மென்பொருளின் ஆற்றலை இணைப்பதன் மூலம் கோபைலட் செயற்கருவி, பாதுகாப்பு வல்லுநர்களுக்கு பயன்படுத்தக் கூடிய எளிதான செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவி அமைப்பாக செயல்படுகிறது.