சந்தை மதிப்பில் (Market Value) கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் (most valuable company) உருவாகியுள்ளது.
ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உலகின் முதல் இரு மதிப்புமிக்க நிறுவனங்களாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தைமதிப்பு 753 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
ஆல்பாபெட் நிறுவனத்தின் சந்தைமதிப்பு 742 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு முறையே 783 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 924 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.