மைக்ரோஹைலா கோடியல்/அகன்ற வாயுடைய மங்களூரு தவளை எனப் பெயரிடப்பட்ட புதிய தவளையினத்தை கர்நாடக மாநிலத்தின் கடற்பகுதியிலுள்ள சிறிய தொழிலக மண்டலத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இத்தவளையினத்திற்கு, மங்களூரு நகரத்தின் பெயர் கொண்டு மைக்ரோஹைலா கோடியல் எனப் பெயரிடப்படுகின்றது. இங்கு தான் இரண்டாண்டுகளுக்கு முன் இவ்வகை உயிரினம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
கொங்கன் மொழியில் மங்களூருவிற்கு கோடியல் என்று பெயர்.
இவ்வகை தவளையினம், சிறிய தொழிலக மண்டலத்தில் மட்டுமே காணப்படுகிறது. இப்பகுதியானது, இதற்கு முன்னர் மரப்பொருட்கள் குவித்து வைக்கும் இடமாக செயல்பட்டது.
இப்பகுதி, துறைமுகம், பெட்ரோ கெமிக்கல், வேதிப்பொருள் மற்றும் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளால் சூழப்பட்டுள்ளது.
மங்களூரு குறுகிய வாயுடைய தவளை, மைக்ரோஹைலா ஜீனஸ் இனத்தைச் சார்ந்தது. இவை பெரும்பாலும் தெற்காசியாவில் காணப்படுகின்றன.
இத்தவளைகள், சாம்பல்-அரக்கு நிறம் மற்றும் அடர் ஆலிவ் பச்சை நிறத்தை அதன் தலையிலும் மங்கலான அடர் பச்சை நிறத்தை அதன் உடலின் மற்ற பகுதிகளிலும் கொண்டுள்ளது.