TNPSC Thervupettagam

மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ அடிப்படையிலான கோவிட்-19 சோதனை

January 23 , 2021 1332 days 569 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கோவிட் – 19 நோயாளிகளின் இரத்த மாதிரியில் மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏவை அளவிடுவதற்காக ஒரு புதிய விரைவு கோவிட் – 19 சோதனையை உருவாக்கியுள்ளனர்.
  • மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ என்பது பொதுவாக செல்களின் ஆற்றல் உற்பத்தியகங்களுக்குள் இருக்கும் ஒரு தனித்துவ மரபணு வகைப் பொருளாகும்.
  • இந்தச் சோதனையானது அதிக வைரஸ் அபாயத்தைக் கொண்டுள்ள மக்களைக் கண்டறிவதற்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
  • மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ ஆனது உடல் செல்களின் உயிரணு ஆற்றல் நுண்ணுறுப்புகளில் அமைந்துள்ளது.
  • மைட்டோகாண்டிரியா ஆனது உணவில் உள்ள ரசாயன ஆற்றலை அடினோசைன் டிரைபாஸ்பேட்டாக (ATP) மாற்றுகின்றது.
  • ATP ஆனது தசைச் சுருக்கம் மற்றும் நரம்புத் தூண்டல் பரவல் ஆகியவற்றிற்கான ஆற்றலை வழங்குகின்றது.
  • மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ ஆனது தாயிடமிருந்து பெறப் படுகின்றது.
  • மனிதர்களைத் தவிர்த்து, மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏ ஆனது பாசிகள் மற்றும் பூஞ்சைகளிலும் காணப் படுகின்றது.
  • மைட்டோகாண்டிரியல் செல்லின் ஆற்றல் மையம் என்றும் அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்