இரு நாடுகளுக்கிடையேயான எல்லைக் கடந்த உறவுகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே டாக்கா வழியே அகர்தலா முதல் கொல்கத்தா வரையில் இரண்டாவது பேருந்து பயண சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து சேவைக்கு மைத்ரே – 2 என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தை சுற்றி கொல்கத்தாவிலிருந்து கோழிக் கழுத்து வழித்தடம் (Chicken Neck Corridor) வழியே செல்ல சுமார் 1650 கி.மீ. தூரம் உள்ளது.
ஆனால் வங்கதேசத்தினுள் டாக்கா வழியே இவ்விரு இந்திய நகரங்களுக்கிடையேயான தொலைவு 515 கிலோ மீட்டர்களேயாகும்.
இவ்வகையில் முதல் மைத்ரே பேருந்து சேவை 2015-ல் துவங்கப்பட்டது.