TNPSC Thervupettagam
March 25 , 2020 1580 days 468 0
  • புனேவில் உள்ள “மைலேப்” (Mylab) என்ற மருத்துவச் சோதனைகளுக்கான  உற்பத்தி நிறுவனமானது கோவிட் – 19 சோதனைக்கான  உபகரணங்களின் விற்பனைக்காக மத்திய மருந்துத் தரநிர்ணயக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் (CDSCO - Central Drugs Standard Control Organization) வணிக ரீதியிலான ஒப்புதலைப் பெற்ற முதலாவது இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனை முறையானது புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியியல் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டத் முதல் சோதனைக் கருவி ஆகும். இதற்கு மத்திய மருந்துத் தரநிர்ணயக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வர்த்தக ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்த உபகரணங்கள் தலைகீழ் குறிமுறை பதிப்பு பல்பழம்நொதித் தொடர் வினையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • ஒரு ஒற்றை உபகரணமானது 100 மாதிரிகளைச் சோதனை செய்யும் திறன் கொண்டதாகும்.
  • தற்பொழுதுள்ள ஆய்வகச் சோதனை முறையில் கோவிட் – 19க்கான சோதனை நேரமானது 4 மணி நேரமாகும்.
  • இருப்பினும், மைலேப்பின் சோதனை நேரமானது இரண்டரை மணி நேரமாகும்.
  • இந்த ஆய்வகமானது இந்த உபகரணங்களை ஒவ்வொரு சோதனைக்கும் ரூ.1200 முதல் ரூ.1500 வரையிலான வரம்பு நிலையில் விற்பனை செய்ய இருக்கின்றது.
  • தற்பொழுது, இந்திய அரசானது கோவிட் – 19 சோதனைக்கான விலையை ரூ.4500 ஆக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்