TNPSC Thervupettagam

மை பாஸ்ட் டேக் (MyFASTag ) மற்றும் பாஸ்ட் டேக் பார்ட்னர் ( FASTag Partner ) செயலிகள்

August 19 , 2017 2687 days 1268 0
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் MyFASTag மற்றும் FASTag பார்ட்னர் எனும் இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலிகளைப் பயன்படுத்தி மின்னணு முறையில் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த முடியும்.
  • அக்டோபர் 1, 2017 முதல் நாட்டிலுள்ள மொத்த 371 சுங்கசாவடிகளின், அனைத்து வழித்தடங்களிலும் பாஸ்ட் டேக் கட்டண முறை செயல்படுத்தப்படும். பாஸ்ட் டேக் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்தும் விதமாக பிரத்யேகமாக ஒரு பாதையும் ஒதுக்கப்படும்.
மின்னணு சுங்கச்சாவடி கட்டணம்
  • சுங்கசாவடி ஊழியர்கள் இல்லாமல் நெடுஞ்சாலை சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் வசூலிக்கும் முறை ETC (Electronic Toll Collection ) எனப்படும்.
  • ETC முறையில் வாகனத்திற்கும், சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு மின்னணு முறையில் பண பரிவர்த்தனை நிகழும்.
மை பாஸ்ட் டேக்
  • பாஸ்ட் டேக் பட்டை பொருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது , பட்டையோடு பதிவு செய்யப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்துக் கொள்ளப்படும். கையில் பணம் செலுத்தி கடவுச்சீட்டு பெற அவசியம் இருக்காது.
பாஸ்ட் டேக் பார்ட்நர்
  • பாஸ்ட் டேக் பார்ட்னர் என்பது பாஸ்ட் டாக் பட்டைகளை விற்பனை செய்யும் வங்கிகள் மற்றும் முகவர்களுக்கான செயலி ஆகும் . சுமார் பத்து வங்கிகள் மற்றும் கைபேசி பண உறை (Mobile Wallet) முகவர்கள் பாஸ்ட் டேக் பட்டைகளை விற்பனை செய்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்