கிராஸ் டிபென்டென்சி முன்னடுப்பு (XDI) என்ற ஒரு அமைப்பின் மூலம் இந்த அறிக்கை வெளியிடப் பட்டது.
உலகில் உள்ள 50 பிராந்தியங்களில் ஒன்பது பிராந்தியங்கள், இந்தியாவில் காணப் படும் பலவீனமான உள்கட்டமைப்பு வீழ்ச்சியினால் அதிகளவுப் பருவநிலை அபாயத்தை எதிர்கொள்கிறது.
பீகார் (22வது இடம்), உத்தரப் பிரதேசம் (25வது), அசாம் (28வது), ராஜஸ்தான் (32வது), தமிழ்நாடு (36வது), மகாராஷ்டிரா (38வது), குஜராத் (48வது), பஞ்சாப் (50வது) மற்றும் கேரளா (52வது) ஆகியவை நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் ஆகும்.
கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான பருவநிலை சார்ந்த இடர்களுக்கு உள்ளாகக் கூடிய மாநிலங்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடாக சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
ஒட்டு மொத்தமாக, உலகளவில் உள்ள 80% மிகவும் பாதிக்கப்படக்கூடிய நகரங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கை மையங்கள் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன.
முதல் 100 இடங்களில் அமெரிக்காவின் 18 பிராந்தியங்கள் இடம் பெற்றுள்ளன.