TNPSC Thervupettagam

மொத்த நிறுவப்பட்ட மின்னாற்றல் உற்பத்தித் திறன் - ஜூலை 2024

August 24 , 2024 91 days 151 0
  • மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 40,527.24 மெகாவாட் ஆகும்.
  • நிலக்கரி மின் உற்பத்தி திறன் ஆனது 12,771.99 மெகாவாட்டாக இருந்தது.
  • இதில், 4,320 மெகாவாட் திறன் ஆனது அரசுத் துறையிடமிருந்தும் 5,426.67 மெகாவாட், திறன் தனியார் துறையிடமிருந்தும் சுமார் 3,025.32 மெகா வாட் திறன் மத்தியத் துறையிடமிருந்தும் பெறப்படுகிறது.
  • தமிழகத்தின் லிக்னைட் அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி திறன் 1,959.16 மெகா வாட்டாக இருந்த நிலையில் மத்திய நிறுவன சார் உற்பத்தித் திறன் 1,709.16 மெகாவாட் மற்றும் தனியார் துறை உற்பத்தித் திறன் 250 மெகாவாட் ஆக இருந்தது.
  • எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் திறன் 1,027.18 மெகாவாட் ஆகும் என்ற நிலையில் இதில் 524.08 மெகாவாட் மாநிலத் துறையிலிருந்தும், 503.10 மெகா வாட் தனியார் துறையிலிருந்தும் பெறப்படுகிறது.
  • தனியார் துறையானது டீசல் அடிப்படையிலான மின்னாற்றல் உற்பத்தித் திறன் 211.70 மெகாவாட்டாக உள்ள நிலையில் இதில் 1,448 மெகாவாட் அணுசக்தி திறன் மத்தியத் துறையிலிருந்து பெறப்படுகிறது.
  • மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த மரபு சார்ந்த மூலங்கள் சார்ந்த மின் நிறுவல் திறன் 17,418.03 மெகாவாட் ஆகும்.
  • மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் நிறுவப்பட்ட திறன் 23,109.21 மெகா வாட்டாக இருந்தது.
  • இதில், 2,178.20 மெகாவாட் நீர் மின்னாற்றல்; 10,881.34 மெகாவாட் காற்று; மற்றும் 8,831.86 மெகாவாட் சூரிய சக்தி ஆற்றலாகும்.
  • மீதமுள்ள புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் திறன்கள் ஆனது உயிரி எரிபொருள் மற்றும் இணை தயாரிப்பு கரும்புச் சக்கை சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் பெறப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்