இது மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது நாட்டில் மொத்த மருந்துகளின் உற்பத்தி விலையைக் குறைக்கும் என்றும் மொத்த மருந்துகளுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அளவின் அடிப்படையில் உலகின் 3வது மிகப்பெரிய தொழிற்துறையாக இந்திய மருந்துத் தொழிற்துறை விளங்குகின்றது.
ஆனால் இந்தியாவானது மருந்துப் பொருட்களின் உற்பத்திக்கான அடிப்படை மூலப் பொருட்களின் இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்துள்ளது.