மொத்த விற்பனை விலையில் பணவீக்கமானது 10.49 சதவிகிதம் ஆக உயர்வு
May 22 , 2021 1157 days 503 0
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விற்பனை விலைக் குறியீட்டினை சமீபத்தில் வெளியிட்டது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான வருடாந்திர பணவீக்க வீதமானது 10.49% ஆகும்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விற்பனை விலை 128.1 ஆக உள்ளது.
மொத்த விற்பனை விலையைக் கணக்கிடுவதற்கான அடித்தள வருடமாக 2011-12 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மொத்த விற்பனை விலையின் பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் இரட்டை இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது என்பது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு அதிவேக உயர்வாகும்.
பணவீக்கமானது அதிகமாக இருப்பதற்கான காரணம்,
கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்வு மற்றும்
தயாரிக்கப்பட்ட (பதப்படுத்தப்பட்ட) உணவுகளின் விலை உயர்வு ஆகியன ஆகும்.