TNPSC Thervupettagam

மொத்த விற்பனை விலையில் பணவீக்கமானது 10.49 சதவிகிதம் ஆக உயர்வு

May 22 , 2021 1285 days 542 0
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விற்பனை விலைக் குறியீட்டினை சமீபத்தில் வெளியிட்டது.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான வருடாந்திர பணவீக்க வீதமானது 10.49% ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விற்பனை விலை 128.1 ஆக உள்ளது.
  • மொத்த விற்பனை விலையைக் கணக்கிடுவதற்கான அடித்தள வருடமாக 2011-12 நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • மொத்த விற்பனை விலையின் பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் இரட்டை இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது என்பது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு அதிவேக உயர்வாகும்.
  • பணவீக்கமானது அதிகமாக இருப்பதற்கான காரணம்,
    • கச்சா பெட்ரோலியத்தின் விலை உயர்வு மற்றும்
    • தயாரிக்கப்பட்ட (பதப்படுத்தப்பட்ட) உணவுகளின் விலை உயர்வு ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்