TNPSC Thervupettagam

மோகுன் பாகன் ரத்னா

July 23 , 2019 1954 days 815 0
  • இந்த மாதத்தின் 29 ஆம் தேதியன்று நடைபெறும் மோகுன் பாகன் மன்றத்தின் வருடாந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஒலிம்பிக்கில் இருமுறை தங்கம் வென்றவரான கேசவ் தத் மற்றும் இந்தியாவின் முன்னாள் கால்பந்து அணித் தலைவரான பிரசூன் பானர்ஜி ஆகியோருக்கு “மோகுன் பாகன் ரத்னா” விருது வழங்கப்பட விருக்கின்றது.
  • 94 வயது நிரம்பிய ஒலிம்பிக் வீரரான கேசவ் தத் 1948 ஆம் ஆண்டில் இலண்டன் விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கிப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் இவர் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹெல்சிங்கி விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதுபற்றி
  • மோகுன் பாகன் தடகள மன்றம் என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தொழில்சார் கால்பந்துக் கூட்டமைப்பு மன்றமாகும்.
  • 1884 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பூபேந்திரநாத் போஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இது இந்தியாவில் தற்பொழுதுள்ள மிகப் பழமையான கால்பந்து கூட்டமைப்பு மன்றமாகும்.
  • இது 1911 ஆம் ஆண்டில் IFA ஷீல்டு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கால்பந்து அணியான “கிழக்கு யார்க்சைர் படைப் பிரிவிற்கு” எதிராக விளையாடி வெற்றி பெற்ற முதலாவது இந்தியக் கால்பந்து மன்றமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்