டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதக் காலக் கட்டத்தில், 27 பட்டியலிடப் பட்ட வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 96 மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இதன் மதிப்பு மொத்தம் ரூ.34,097 கோடியாகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.4,820 கோடி மதிப்பிலான மோசடி நடந்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தான் அதிகபட்சமாக 13 மோசடிகள் நடந்துள்ளன.