TNPSC Thervupettagam

வாராக் கடன் வங்கி (Bad bank) அமைப்பு

September 21 , 2021 1034 days 579 0
  • வங்கிகளில் இருந்து வாராக் கடன் சொத்துக்களைக் கையகப்படுத்தி அவற்றைச் சந்தையில் விற்க அரசாங்கம் இரண்டு புதிய நிறுவனங்களை அமைத்துள்ளது.
  • அதைச் செயல்படுத்துவதற்கு உத்தரவாதமாக ரூ .30,600 கோடியைப் பயன்படுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • NARCL-IDRCL அமைப்பு ஆனது இந்தப் புதிய Bad bank ஆகும்.
  • "தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்" (NARCL - National Asset Reconstruction Company Limited) ஆனது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே இணைக்கப் பட்டுள்ளது.
  • இது பல்வேறுக் கட்டங்களில் பல்வேறு வணிக வங்கிகளிடமிருந்து சுமார் 2 லட்சம் கோடி மதிப்புள்ள வாராக் கடன் சொத்துக்களைக் கையகப்படுத்தும்.
  • மற்றொரு நிறுவனம் இந்தியக் கடன் தீர்வு நிறுவனம் ஆகும் (IDRCL - India Debt Resolution Company Ltd).
  • பொதுத் துறை வங்கிகளைப் பாதிக்கும் மோசமான வாராக் கடன்களின் மீதான  பிரச்சனையைத் தீர்க்க Bad bank அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்