TNPSC Thervupettagam

மோச்சா புயல்

May 19 , 2023 558 days 298 0
  • மோச்சா புயல் ஆனது வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரின் சிட்வே ஆகியவற்றுக்கு இடையே கரையைக் கடந்தது.
  • மோக்கா என உச்சரிக்கப் படும் 'மோச்சா' என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்தது.
  • காபி உற்பத்திக்குப் பெயர் பெற்ற செங்கடல் துறைமுக நகரத்தின் பெயரால் இந்தப் புயலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த நகரமானது அந்தப் பெயரை தனது பிரபல பானமான கஃபே மோச்சா என்பதற்கும் அளித்துள்ளது.
  • சித்ர் என்ற புயலுக்குப் பிறகு, வங்காளதேசத்தினைத் தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்தப் புயல் மோச்சா ஆகும்.
  • 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்காளதேசத்தின் தெற்கு கடற்கரையைத் தாக்கிய சித்ர் புயல் 3,000க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பலி வாங்கி, பில்லியன் டாலர் அளவில் சேதத்தை ஏற்படுத்தியது.
  • 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் புயல் மியான்மரின் ஐராவதி டெல்டாவினை சேதப் படுத்தி, குறைந்த பட்சம் 138,000 பேரின் உயிரைப் பலி வாங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்