2018-19 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சுகாதார மருத்துவ காப்பீட்டு திட்டமான (Health Care Insurance Plan) “மோடி கேர்“ (Modi Care) திட்டத்திலிருந்து நாட்டின் முதல் மாநிலமாக மேற்கு வங்கம் வெளியேறியுள்ளது..
தன்னுடைய மருத்துவ காப்பீடு திட்டமான சுவஸ்தய சதி திட்டத்தில் (Swasthya Sathi programme) ஏற்கனவே மாநிலத்தில் 50 லட்சம் மக்கள் பதிவு செய்துள்ளனர் என காரணம் சுட்டி மேற்கு வங்கம் மோடி கேர் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது.
மத்திய நிதி அமைச்சரால் பிப்ரவரி 1 அன்று பொது பட்ஜெட்டில் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (National Health Protection Scheme- NHPS) அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் கூட்டு மக்கட் தொகைகளைக் காட்டிலும் அதிகமான மக்கட் தொகைக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கவல்ல உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இதுவேயாகும்.