TNPSC Thervupettagam

மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம்

August 26 , 2019 1825 days 623 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான “ஆர்டர் ஆப் சயீத்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனத் தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • ஆண்டுக்கு சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவில் இருதரப்பு வர்த்தகத்துடன் ஐக்கிய அரபு அமீரகமானது இந்தியாவின் 3-வது பெரிய வர்த்தக கூட்டுதாரர் நாடு ஆகும்.
  • இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இது 4-வது இடத்தில் உள்ளது.
  • பிரதமர் அங்கு ரூபே அட்டையை அறிமுகப்படுத்தியதன் மூலம் மேற்காசிய நாடுகளில் இந்திய உள்நாட்டு மின்னணுப் பணவழங்கீட்டு முறையை துவங்கும் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்