TNPSC Thervupettagam

மோட்டார் வாகனங்களுக்கான புதிய ஆயுட்கால வரி விகிதம்

October 15 , 2023 279 days 301 0
  • பத்தாண்டுகளுக்குப் பிறகு, புதிய வாகனங்களின் ஆயுட்கால வரி விகிதத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வண்டிகள் (விசையுந்துகள்) வரி விதிப்புச் சட்டத்தினை திருத்தியமைக்கும் மசோதாவானது சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டது.
  • ஒரு புதிய இருசக்கர வாகனங்களுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது, அதன் மொத்த விலை 1 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 12% ஆகவும், அதன் மொத்த விலை ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 10% ஆகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
  • புதிய மகிழுந்துகள் மற்றும் பிற புதிய மோட்டார் வண்டிகளுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது, அந்த வாகனத்தின் விலை 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 20% ஆக இருக்கும்.
  • 10 இலட்சம் முதல் 20 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட புதிய மகிழுந்துகள் மற்றும் பிற புதிய மோட்டார் வண்டிகளுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது 18% ஆக இருக்கும்.
  • 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட வாகனங்களுக்கான ஆயுட்கால வரி விகிதம் ஆனது 13% ஆக இருக்கும்.
  • 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்பு கொண்ட வாகனங்களுக்கான ஆயுட்கால வரி விகிதம் 12% ஆக இருக்கும்.
  • வாகனப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளை நிறைவு செய்த மோட்டார் வண்டிகளுக்கு (போக்குவரத்து வாகனங்கள் தவிர) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1,500 ரூபாய் பசுமை வரி செலுத்த வேண்டும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப் பட்டு உள்ளது.
  • வாகனப் பதிவு செய்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த இருசக்கர வாகனங்களுக்கு, அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 750 ரூபாய் பசுமை வரி செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்