மோதல் நிறைந்த பகுதிகளில் கிடைக்கப் பெறும் தாதுக்கள்
May 8 , 2024 200 days 236 0
காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) ஆற்றல் மற்றும் எண்ணிமப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக "இரத்த தாதுக்களை" வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அதன் பிராந்தியத்தில் மோதல்களைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் திறன் பேசித் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், வழங்கீட்டாளர்களை ஆய்வு செய்யாமல் கனிமங்களுக்குப் பணம் செலுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் வழங்கீட்டாளர்கள் வாங்கும் டின், டங்ஸ்டன், டான்டலம் - 3Ts - மற்றும் தங்கம் சிக்கல் இல்லாதவை மற்றும் போருக்குப் பயன்படும் வகையில் நிதி அளிப்பதில்லை என்று வாதிட்டது.
டான்டலம், டின், டங்ஸ்டன் மற்றும் தங்கம் (ஒட்டு மொத்தமாக 3T அல்லது 3TG என அழைக்கப் படுகிறது) ஆகியவை நிறைந்த DRC நாட்டின் கனிமங்கள் நிறைந்த கிழக்குப் பகுதி பல தசாப்தங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கிவு பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, DRC நாட்டின் கிழக்குப் பகுதியில் தோராயமாக 120 ஆயுதக் குழுக்கள் உள்ளன.
இந்த ஆயுதக் குழுக்கள் சுரங்கம் மற்றும் கனிமங்களின் வர்த்தகத்தினால் பல்வேறு வகைகளில் பயனடைகின்றன.