TNPSC Thervupettagam

மோதல் நிறைந்த பகுதிகளில் கிடைக்கப் பெறும் தாதுக்கள்

May 8 , 2024 200 days 235 0
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) ஆற்றல் மற்றும் எண்ணிமப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக "இரத்த தாதுக்களை" வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அதன் பிராந்தியத்தில் மோதல்களைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
  • அமெரிக்காவின் திறன் பேசித் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், வழங்கீட்டாளர்களை ஆய்வு செய்யாமல் கனிமங்களுக்குப் பணம் செலுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.
  • ஆப்பிள் நிறுவனம், அதன் வழங்கீட்டாளர்கள் வாங்கும் டின், டங்ஸ்டன், டான்டலம் - 3Ts - மற்றும் தங்கம் சிக்கல் இல்லாதவை மற்றும் போருக்குப் பயன்படும் வகையில் நிதி அளிப்பதில்லை என்று வாதிட்டது.
  • டான்டலம், டின், டங்ஸ்டன் மற்றும் தங்கம் (ஒட்டு மொத்தமாக 3T அல்லது 3TG என அழைக்கப் படுகிறது) ஆகியவை நிறைந்த DRC நாட்டின் கனிமங்கள் நிறைந்த கிழக்குப் பகுதி பல தசாப்தங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
  • கிவு பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, DRC நாட்டின் கிழக்குப் பகுதியில் தோராயமாக 120 ஆயுதக் குழுக்கள் உள்ளன.
  • இந்த ஆயுதக் குழுக்கள் சுரங்கம் மற்றும் கனிமங்களின் வர்த்தகத்தினால் பல்வேறு வகைகளில் பயனடைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்